எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த ஜனவரி 28-இல் இரண்டு கப்பல்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கப்பல்கள் சேதமடைந்தன. இதில் ஒரு கப்பலிலிருந்து எண்ணெய்ச் கசிவு ஏற்பட்டது. இது எர்ணாவூர் பாரதியார் நகர் அருகே கடற்கரையையொட்டி படிந்துள்ளது.
கடலில் எண்ணெய் மிதப்பதால் மீன் வளம், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்வளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், சுற்றுச்சூழலும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 டன் எடையுள்ள இந்த எண்ணெய்க் கழிவுகள் ஆள்கள் மூலம் கடந்த ஒரு வாரமாக அகற்றப்பட்டு வருகிறது. அகற்றப்பட்டு வரும் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் எவ்வாறு அழிக்கப் போகிறார்கள் என்ற சந்தேகம் பொதுமக்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில், எண்ணெய்க் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அழிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

இந்தநிலையில் எண்ணூர் கடற்கரை பகுதிகளில் தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமினுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆய்வு நடத்தினார். மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ள அதிகாரிகளிடம் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், கடல்பகுதியில் படிந்திருக்கும் கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் தமிழக அரசுடன் இணைந்து மத்திய அரசும் பணியாற்றி வருகிறது. கச்சா எண்ணெய் கழிவுகளை முழுமையாக அகற்றும் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் கடல் பகுதியில் முழுமையாக எண்ணெய் படலம் அகற்றும் பணி முடிவடைந்திருக்கிறது. இதேபோல், சென்னை கடற்பரப்பிலும் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன, இன்னும் ஓரிரு நாட்களில் திருவள்ளூர் மாவட்ட கடல்பகுதியில் படிந்துள்ள எண்ணெய் படலம் அகற்றப்படும் என்று கூறியுள்ளார்.
எதிர்ப்பாராதவிதமாக இரு கப்பல்கள் மோதிக்கொண்டதில் ஒரு கப்பலில் இருந்து சிறு துவாரம் மூலம் கச்சா எண்ணெய் வெளியேறியதால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. நடந்த இச்சம்பவத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் கடல் வளம் பாதிக்கப்படாது, கடலில் உள்ள மீன்கள் பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடல் மீனை உண்பதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அஞ்சா வேண்டாம் என்றும் கூறினயுள்ளார்.
மேலும், எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு துறையைச் சார்ந்தவர்களுக்கும் தமிழக அரசு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள், கப்பல் உள்ளிட்டவையின் சேதம் குறித்து மதிப்பிடப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com