காலமானார்: கவிஞர் கா.சு.மணியன்

கவித் தென்றல் என்று அழைக்கப்படும் கவிஞர் கா.சுப்ரமணியன் (67) மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தார்.
காலமானார்: கவிஞர் கா.சு.மணியன்

கவித் தென்றல் என்று அழைக்கப்படும் கவிஞர் கா.சுப்ரமணியன் (67) மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆத்தங்குடியில் 1950 செப்டம்பர் 17-இல் பிறந்தார். 1973 முதல் 1998 வரை கொல்கத்தாவில் சௌத் இந்தியா கார்ப்பரேஷனில் பணியாற்றினார்.
கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கொல்கத்தாவில் 1976-77இல் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெறவும், தெற்கு லேக் ரோடு, கவி பாரதி சாலை என பெயர் மாற்றம் செய்யப்படவும், விவேகானந்தா பூங்காவில் பாரதி சிலை நிறுவுவதற்கும் முக்கியப் பங்காற்றி உள்ளார். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், ஹிந்தி, வங்காளம் ஆகிய மொழிகளிலும் சிறந்த புலமை பெற்றிருந்தார்.
பல்வேறு பத்திரிகைகளிலும் கதை, கட்டுரை, கவிதை எழுதியுள்ள இவருக்கு கவிஞர்கள் கண்ணதாசன், வாலி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது.
கா.சு.மணியனுக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். பணி ஓய்வுக்குப் பிறகு, குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார். இந்த நிலையில், அவர் மாரடைப்பு காரணமாக கோவையில் தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை காலை உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்கு ஆத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற உள்ளது. தொடர்புக்கு 94425-66427.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com