திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கம்

சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி
ரயில் எண் 06001: பிப்ரவரி 17-இல் எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
ரயில் எண் 06002: பிப்ரவரி 19-இல் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம்
ரயில் எண் 06005: பிப்ரவரி 24-இல் சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.55 எர்ணாகுளம் சென்றடையும்.
ரயில் எண் 06006: பிப்ரவரி 26-இல் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com