புதுவையில் மே 1 முதல் தலைக்கவசம் கட்டாயம்

புதுவையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மே 1-ஆம் தேதி முதல் தலைக் கவசம் அணிவது கட்டாயம் என்று முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவையில் மே 1 முதல் தலைக்கவசம் கட்டாயம்

புதுவையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மே 1-ஆம் தேதி முதல் தலைக் கவசம் அணிவது கட்டாயம் என்று முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர், புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் சட்டம் - ஒழுங்கு பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பல்வேறு குற்றங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் கொலை வழக்கில் 9 பேர் சரண் அடைந்துள்ளனர். தலைமறைவான 6 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு பதிவான 4,049 வழக்குகளில் 3,215 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல், நெல்லித்தோப்பு இடைத் தேர்தல் ஆகியவை அமைதியான முறையில் நடைபெற்றுள்ளன.
கடந்த 2016-ஆம் ஆண்டில், மொத்தம் 710 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 60 பேர் தலையில் காயம் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளனர். இதனால், புதுவையில், வருகிற மே 1-ஆம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனை காவல் துறை தீவிரமாக நடைமுறைப்படுத்தும்.
புதுவை காவல் துறையை நவீன மயமாக்க அரசு முனைப்புடன் உள்ளது. இதற்கான நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் அளிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், சைபர் க்ரைம் பிரிவை நவீனப்படுத்துதல், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் முதல்வர் நாராயணசாமி.
டி.ஜி.பி. சுனில்குமார் கெளதம், எஸ்.எஸ்.பி. ஏகே.கவாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, பேரவை பொதுத் தேர்தலைச் சிறப்பாக நடத்தியமைக்காக குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது பெற்ற சீனியர் எஸ்.பி. கவாஸை முதல்வர் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com