மலேசிய முருகன் கோயில் விவகாரம்: தமிழக அறக்கட்டளை தலையிட வேண்டாம்

மலேசிய நாட்டில் உள்ள முருகன் கோயில் விவகாரங்களில் அறுபடை வீடு அறக்கட்டளை தலையிட வேண்டாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய முருகன் கோயில் விவகாரம்: தமிழக அறக்கட்டளை தலையிட வேண்டாம்

மலேசிய நாட்டில் உள்ள முருகன் கோயில் விவகாரங்களில் அறுபடை வீடு அறக்கட்டளை தலையிட வேண்டாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில், தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் கடந்த 230 ஆண்டுகளாக பினாங்கு தமிழ் மக்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலை அறக்கட்டளை பராமரித்து வருகிறது. ஆலயக் குழுத் தலைவராக பினாங்கு மாநிலத் துணை முதலமைச்சர் ராமசாமி பணியாற்றி வருகிறார். இவர் தங்க ரதம் அமைத்து, தமிழர்கள் வாழும் பகுதியில் சுற்றிவர ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை வீடு அறக்கட்டளை என்ற அமைப்பு, பினாங்கில் உள்ள தங்க ரதம் கோயில் சுற்றுப் பிரகாரத்தில் மட்டும்தான் சுற்றி வர வேண்டும் என்று அறிக்கை தந்துள்ளது. இது தவறாகும்.
மக்களுக்காகத்தான் ஆலயம். மக்கள் வாழும் பகுதிகளில் தங்க ரதம் சுற்றி வருவதில் தவறு எதுவும் இல்லை.
தண்ணீர்மலை முருகன் கோயில் குறித்து முடிவு எடுக்கும் முழு அதிகாரம் அந்த ஆலயக் குழு நிர்வாகத்துக்கும், திருப்பணிக் குழுத் தலைவருக்கு மட்டுமே உண்டு என்று வைகோ கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com