பணிந்தார் பன்னீர்செல்வம்... முதல்வராகிறார் சசிகலா...

முதல்வர் பன்னீர்செல்வம் பணிந்துபோய் பதவியை சசிகலாவிடம் விட்டுக் கொடுத்தையடுத்து ஒரு சில தினங்களில் முதல்வராகப் பதவியேற்கப் 
பணிந்தார் பன்னீர்செல்வம்... முதல்வராகிறார் சசிகலா...

சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் பணிந்துபோய் பதவியை சசிகலாவிடம் விட்டுக் கொடுத்தையடுத்து இன்னும் ஒரு சில தினங்களில் முதல்வராகப் பதவியேற்கப் போகிறார் வி.கே. சசிகலா.
இன்றைய அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கைகள்-வேண்டுகோள்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் இதனை வலியுறுத்தி எம்எல்ஏக்கள் பேசக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று சனிக்கிழமையே சென்னைக்கு வந்துள்ள அதிமுக பேரவை உறுப்பினர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வரத்தொடங்கினர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும்
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுகவின் சட்டமன்றக்குழு தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  சட்டமன்றக்குழு தலைவராக சசிகலா பெயரை முன்மொழிந்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
இதையடுத்து ஒரு சில தினங்களில் வி.கே சசிகலா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
முதல்வர் பதவியிலிருந்து விலக தயாராக இல்லாமல் இருந்த வந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பை எதிர்த்து எந்தவித அதிருப்தியையும் வெளிப்படையாக காட்டாமல் குழப்பத்தில் இருந்து வந்த பன்னீர்செல்வம், சசிகலா தரப்பிடம் பணிந்துபோய் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்து வந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானார். அன்று முதல் இன்று வரை அதிமுக கட்சியிலும், தமிழக அரசிலும் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.
முதலில் இரவோடு இரவாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவும், கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கும் பலர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பலர் ஆட்சியும், கட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். அதாவது, கட்சியை தலைமை ஏற்று நடத்துபவரே, முதல்வராகவும் இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது. சசிகலாவே முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் (ஜனவரி) 27-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்காமல் நடந்து முடிந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு ஆலோசகர் ராஜிநாமா, முதல்வரின் செயலர்கள் விடுவிப்பு போன்ற பல்வேறு செய்திகளுக்கு நடுவே, இன்று 2-வது முறையாக நடைபெற்று வரும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  
சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலாவை ஒ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் தமிழகத்தின் 12-வது முதல்வராக சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.
சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, சசிகலாவிடம் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தனது ராஜிநாமா கடிதத்தை கொடுத்து உள்ளார். இதையடுத்து வரும் 7-ஆம் தேதி பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டால் ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதாவை அடுத்து தமிழகத்தின் 3வது பெண் முதல்வர் ஆவார்.
அதிமுக எம்எல்ஏக்களுடன் தொகுதிகளில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் ஆலோசனை நடத்தும் கூட்டமானது முதல்வரை செய்யும் கூட்டமாக மாறிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com