ஹெராயின் கடத்தல் வழக்கு: 5 பேருக்கு 10 ஆண்டு சிறை

ஹெராயின் கடத்தல் வழக்கில் 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹெராயின் கடத்தல் வழக்கில் 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 2012-ஆம் ஆண்டு மே 11-இல் வந்த ரயிலில் போதை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 6 கிலோ ஹெராயினை கடத்தியதாக பத்ரிலால், அவரது மனைவி முன்னிபாய், மகள் ரேகா, ராமேஷ்வர், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் 5 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கும் முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி கே.ஐயப்பன் தீர்ப்பளித்தார்.
மேலும், ராமேஷ்வருக்கும், மணிவண்ணனுக்கும் தலா ரூ.3 லட்சமும், மற்ற 3 பேருக்கு தலா ரூ.2 லட்சமும் அபராதமும் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com