அதிமுகவிலிருந்து ப.கண்ணன் விலகல்

புதுச்சேரி மாநில அதிமுக மூத்தத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ப.கண்ணன் அந்தக் கட்சியில் இருந்து விலகினார்.
அதிமுகவிலிருந்து ப.கண்ணன் விலகல்

புதுச்சேரி மாநில அதிமுக மூத்தத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ப.கண்ணன் அந்தக் கட்சியில் இருந்து விலகினார்.
2015-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், கண்ணன் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து, புதுவை மாநில தேர்தல் பிரிவுச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.
2016-ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த சில காலமாக கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்து வந்த கண்ணன் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து விலகுகிறேன். என்ன காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். விலகல் தொடர்பாக மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. அடுத்தக்கட்ட முடிவு குறித்து உரிய நேரத்தில் தெரிவிப்பேன் என்றார் அவர்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய கண்ணன், புதுவை மாநில அமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர், மாநிலங்களவை எம்.பி. பதவிகளை வகித்தவர். பின்னர், கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2014-ஆம் ஆண்டு முதல் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com