சசிகலாவுக்கு தலைவர்கள் வாழ்த்து

அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, முதல்வராக வி.கே.சசிகலா பொறுப்பேற்க உள்ளதையடுத்து, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, முதல்வராக வி.கே.சசிகலா பொறுப்பேற்க உள்ளதையடுத்து, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: வி.கே.சசிகலாவுக்கு வாழ்த்துகள். இந்த மாற்றம் குறித்து மக்கள் மத்தியில் உள்ள கருத்துகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர் செயல்படுவார் என நம்புகிறேன்.
அகில இந்திய தேசிய லீக் கட்சி மாநிலத் தலைவர் எஸ்.ஜே. இனாயத்துல்லாஹ்: மகிழ்ச்சி அளிக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் விரைவில் முதல்வராக சசிகலா பொறுப்பேற்று தமிழகத்தை வழிநடத்த வேண்டும்.
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்: சசிகலாவுக்கு வாழ்த்துகள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை சசிகலாவும் செயல்படுத்துவார் என நம்புகிறேன். மறைந்த முதல்வரின் காலத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. இவரும் அதைப் பின்பற்றி எஞ்சிய மதுக்கடைகளையும் மூடவேண்டும். 7 பேர் விடுதலை உள்பட 15 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com