தமிழருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி வாய்ப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி வாய்ப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:-
உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள 8 நீதிபதிகள் பணியிடங்களில் 5 இடங்களை நிரப்புவதற்காக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நவீன் சின்ஹா (ராஜஸ்தான்), சஞ்சய் கிஷன் கௌல் (சென்னை), தீபக் குப்தா (சத்தீஸ்கர்), சந்தன கவுடர் (கேரளம்), அப்துல் நசீர் (கர்நாடகம்) ஆகிய 5 பேரின் பெயர்களை உச்ச நீதிமன்றத்தின் "கொலீஜியம்' என்ற மூத்த நீதிபதிகள் குழு மத்திய சட்ட அமைச்சகத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த ஜம்மு- காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பால் வசந்தகுமாரின் பெயரும் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயர் இடம்பெறவில்லை. வங்கிகளில் கல்விக் கடன் கட்டாயம், மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்காமல் ஒரே வகுப்பில் தேக்கி வைப்பதற்கு தடை, மலைப் பகுதிகளில் கிரானைட் குவாரிகள் அமைக்கத் தடை, நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக் கடைகள் அகற்றம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை பால்வசந்தகுமார் அளித்துள்ளார்.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி சிவகீர்த்தி சிங் கடந்த நவம்பரில் ஓய்வு பெற்றபோது, அந்த மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சின்ஹாவும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி கோபால கவுடா கடந்த அக்டோபரில் ஓய்வு பெற்றபோது, அதே மாநிலத்தைச் சேர்ந்த இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா 22.7.2016-அன்றும், நாகப்பன் 03.10.2016 அன்றும் ஓய்வு பெற்ற நிலையில், அவர்களுக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்படவில்லை.
எனவே, காலியாக உள்ள 3 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com