நந்தினி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்: மு.க. ஸ்டாலின்

நந்தினி வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிற 10ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
stalin
stalin

நந்தினி வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிற 10ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கான கடித வடிவில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினிக்கு ஏற்பட்ட கொடூர மரணம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.
போலீஸôர் விசாரணையில் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் பிரமுகர் மணிகண்டன், அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்து கிணற்றில் வீசியிருப்பது தெரியவந்தது.
மணிகண்டனும், அவருடைய நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். மணிகண்டன் மீது குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கிறது.
தில்லியில் நிர்பயா என்ற இளம்பெண் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பிறகு, நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.
அப்போது தமிழகத்திலும் ஸ்ரீவைகுண்டம் மாணவி புனிதாவில் தொடங்கி பல இளம்பெண்கள் பாலியல் கொடுமைக்குள்ளாகிக் கொலை செய்யப்பட்டனர். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, பெண்களின் பாதுகாப்புக்காக "13 அம்சங்கள்' கொண்ட சிறப்புத் திட்டத்தை அறிவித்தார்.
வேலை பார்க்கும் மகளிருக்கான விடுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு, பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற அந்த அறிக்கையில் இருந்த அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றவில்லை. பாலியல் குற்றத்துக்கு கடும் தண்டனை என்ற அறிவிப்பும் காற்றோடு போய்விட்டது.
அதன் விளைவுதான், நந்தினிக்கு இந்த கதி ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிற 10 ஆம் தேதி திமுக சார்பில் அரியலூரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com