நூதன முறையில் ரூ.3,700 கோடி மோசடி

தில்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தனது முதலீட்டாளர்களிடமிருந்து நூதன முறையில் ரூ.3,700 கோடியை மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

தில்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தனது முதலீட்டாளர்களிடமிருந்து நூதன முறையில் ரூ.3,700 கோடியை மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
தில்லியை அடுத்த நொய்டாவை மையமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் "மெஸர்ஸ் அப்லேஸ்' என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனமானது கடந்த சில மாதங்களுக்கு ஒரு நூதனமான அறிவிப்பை வெளியிட்டது.
அதாவது, தமது நிறுவனம் முகநூல், கூகுள் உள்ளிட்ட சமூக வலைதளங்களுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ளதாகவும், எனவே, தங்கள் நிறுவனத்தின் வலைதளத்தில் பதிவேற்றப்படும் திட்டங்களுக்கு விருப்பத்தை (லைக்ஸ்) பதிவிடுபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்
கப்படும் என்றும் அறிவித்தது.
மேலும், அந்நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கே இந்த வாய்ப்பு உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. இதனை நம்பி ஏராளமானோர் அந்நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். அந்நிறுவனம் அறிவித்தபடி, அது பதிவேற்றும் திட்டங்களுக்கும் முதலீட்டாளர்கள் விருப்பங்களைப் பதிவிட்டனர்.
எனினும், அந்நிறுவனம் கூறியபடி அவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர்கள், இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக நொய்டாவில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அண்மையில் வந்தனர். ஆனால், அந்த அலுவலகம் அங்கு இயங்கவில்லை. இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் இதுகுறித்து உத்தரப் பிரதேச காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸôர், அந்நிறுவனத்தினர் உரிமையாளர் அனுபவ் மிட்டல் உள்ளிட்டோரை கடந்த சனிக்கிழமை கைது செய்தனர்.
மேலும், இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் அந்நிறுவனத்துக்கு எதிராக கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் அந்நிறுவனத்தின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com