முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜிநாமா

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜிநாமா

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார்.
இதுதொடர்பாக அவர் ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், "தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பொறுப்பை ராஜிநாமா செய்கிறேன். ராஜிநாமாவை கனிவுடன் ஏற்றுக் கொண்டு டிசம்பர் 6-இல் நியமிக்கப்பட்ட அமைச்சர்களையும் விடுவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
2001-இல்...: டான்சி வழக்கு காரணமாக, மறைந்த ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து 2001-ஆம் ஆண்டு செப்டம்பரில் விலக நேரிட்டது. அப்போது, பன்னீர்செல்வம் முதல் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார். வழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை 2002-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ராஜிநாமா செய்தார்.
2014-இல் மீண்டும்...: சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக, முதல்வர் பதவியை தொடர முடியாத நிலை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது. இதனால், 2014-ஆம் ஆண்டு செப்டம்பரில் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம். 2015-ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றம் வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்தது. இதைத் தொடர்ந்து, தான் வகித்த முதல்வர் பதவியை மே மாதத்தில் ராஜிநாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு...: முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 டிசம்பர் 5-இல் மரணம் அடைந்தார். அன்றைய இரவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது. இரு மாதங்கள் முதல்வராகப் பதவி வகித்த அவர், பிப்ரவரி 5-இல் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

பிரதமர்-ஆளுநருக்கு நன்றி

முதல்வராக இருந்த காலத்தில் நல் ஆதரவை வழங்கியதற்காக நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு தனித்தனியே கடிதங்களை அனுப்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
"முதல்வராகப் பதவி வகித்த காலத்தில் முழுமையான ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் வழங்கியதற்காக மனமார்ந்த நன்றி' என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com