ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தொடங்கியது

தமிழகம் முழுவதும் தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று திங்கள்கிழமை தொடங்கி வரும் 28-ஆம் தேதி வரை அரசு பள்ளிகள்
ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தொடங்கியது

தமிழகம் முழுவதும் தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று திங்கள்கிழமை தொடங்கி வரும் 28-ஆம் தேதி வரை அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளில் நடைபெறுகின்றன.
சென்னை மாநகரில் உள்ள 2,280 பள்ளிகள், 1336 அங்கன்வாடி மையங்களில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி முகாம்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது சிறுவர்கள் வரை முகாம்கள் நடைபெறும். ஏற்கெனவே தடுப்பூசி போட்டிருந்தாலும், கூடுதலாக ஒரு தவணை தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படும். இதனால் 16.3 லட்சம் குழந்தைகள் பயனடையவுள்ளனர். தமிழகத்தில் 1 கோடியே 80 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு வாரத்தில் அனைத்து பள்ளிகளிலும், மூன்றாம் வாரத்தில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களிலும் நடைபெறவுள்ளது. இறுதியாக நான்காவது வாரத்தில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி விடுபட்ட குழந்தைகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரூபெல்லா தடுப்பூசி முகாமை சென்னை வேளச்சேரியில் தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர், தடுப்பூசி போட்ட ஒரு வாரத்துக்கு பிறகு, குழந்தைகளுக்கு காய்ச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படும். அவற்றால் அச்சப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com