கூடலூர் அருகே பள்ளத்தில் விழுந்த தாய் யானை, குட்டி மீட்பு

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த போஸ்பாறா பகுதியில் பள்ளத்தில் தவறி விழுந்த தாய் யானையையும், அதன் குட்டியையும் வனத் துறையினர் உயிருடன் திங்கள்கிழமை மீட்டனர்.
பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட பிறகு குட்டிக்குப் பால் கொடுக்கும் தாய் யானை.

தேவர்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மச்சிக்கொல்லி தனியார் எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டிற்கு உணவு தேடி குட்டியுடன், 20 வயது மதிக்கத்தக்க தாய் யானை ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துள்ளது. அப்போது, அங்குள்ள பள்ளத்தில் தாய் யானையும், குட்டியும் தவறி விழுந்தன.
தகவலின் பேரில் வனத் துறை ஊழியர்கள் தாய் யானையையும், குட்டியையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் குட்டி யானை மீட்கப்பட்டு அருகில் இருந்த மரத்தில் கட்டி வைக்கப்பட்டது. தொடர்ந்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் தாய் யானையின் கால்களில் கயிறு கட்டி மேலே இழுக்கப்பட்டது. இதையடுத்து, மேலே வந்த தாய் யானையும், குட்டியும் அருகிலுள்ள முதுமலை வனப் பகுதிக்குள் சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com