பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் மேலும் ஒருவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் மேலும் ஒருவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
புதுவையில் பன்றிக் காய்ச்சல் நோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 38 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில், 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுவரை 4 பேர் பன்றிக் காய்ச்சல் பாதித்து உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது 5 ஆக உயர்ந்துள்ளது.
புதுவை முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த மதியழகன் (50) சிறுநீரகம் பாதிக்கப்பட்டு புதுவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மதியழகன் திங்கள்கிழமை உயிரிழந்தார். ஏற்கெனவே, முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த தயாளன், பனித்திட்டு பகுதியைச் சேர்ந்த பானுமதி, பெரிய காலாப்பட்டு முருகன் மற்றும் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சத்யநாராயணன் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தனர்.
பன்றிக் காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com