பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் தொடங்கின

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கின. தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 2-இல் தொடங்கவுள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் எழுத உள்ளனர்.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கின. தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 2-இல் தொடங்கவுள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் எழுத உள்ளனர்.
இதையடுத்து, தமிழ், ஆங்கில பாடங்களுக்கான கேட்டல், பேசுதல் செய்முறைத் தேர்வுகளும், அறிவியல், கணினி அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு கட்டங்களாக பிப்ரவரி 24-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், நுண் வேதியியல், நர்சிங், ஊட்டச்சத்து - உணவுப் பதப்படுத்துதல், மனையியல், டெக்ஸ்டைல் உள்ளிட்ட 46 பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதையடுத்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. சென்னையில் பிப்ரவரி 6 முதல் 12-ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், பிப்ரவரி 13 முதல் 20-ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் தேர்வுகள் நடைபெற உள்ளன. சென்னையில் மட்டும் 303 மையங்களில் சுமார் 40 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com