விஐடி ரிவேரா கலைவிழா: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

வேலூர் விஐடி பல்கலைக்கழக ரிவேரா-17 சர்வதேச கலைவிழா போட்டிகளில் வெள்ளி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அதன் நிறைவு விழாவில் பாலிவுட் நடிகர் அயுஷ்மான் குரானா பரிசுகள் வழங்கினார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழக ரிவேரா-17 சர்வதேச கலைவிழா போட்டிகளில் வெள்ளி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அதன் நிறைவு விழாவில் பாலிவுட் நடிகர் அயுஷ்மான் குரானா பரிசுகள் வழங்கினார்.
விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா-17 சர்வதேச கலை, விளையாட்டு விழா கடந்த நான்கு நாள்கள் நடைபெற்றது. ஆப்பிரிக்கா, சீனா, பல்கேரியா, நெதர்லாந்து, நேபாளம் உள்பட 10 வெளிநாடுகள், உள்நாட்டில் உள்ள 250 பல்கலை, கல்லூரிகளில் இருந்து 24,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அயுஷ்மான் குரானா ரிவேரா கலை, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
விஐடி துணைத் தலைவர்கள் சங்கர், ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், மாணவர் நலன் இயக்குநர் அமித் மகிந்தரகர், ரிவேரா ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கலைப் போட்டிகளில் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகமும், விளையாட்டுப் போட்டிகளில் விஐடி பல்கலைக்கழகமும் சாம்பியன் கோப்பையை வென்றன. கலைப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலை. இரண்டாமிடம் பெற்றது.
ரிவேரா மாணவர் அமைப்பாளர் ராவி நாயக் வரவேற்றார். மாணவர் திவேஷ் பாண்டே நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com