குடியரசுத் தலைவரை அதிமுக எம்எல்ஏக்கள் சந்திக்க திட்டம்

தமிழக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம்

சென்னை: தமிழக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் தாமதம் செய்வது குறித்து குடியரசுத் தலைவரிடம் நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவில் நடைபெற்று வரும் சங்டங்களை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வருகிறார். இதையடுத்து நேற்று அதிமுக பொருளார் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அதிரடியாக அறிவித்தார்.
இதையடுத்து தற்போது நிலவி வரும் சூழ்நிலையில், சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் 131 அதிமுக பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய சசிகலா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சக்தி நம்முடன் இருப்பதால் எந்த சக்தியும் நம்மை அசைத்து பார்க்க முடியாது. அதிமுக ஒரே குடும்பமாக உள்ளது. அதிமுகவின் ஒற்றுமையை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது. அதிமுக எம்எல்ஏக்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கவில்லை என்று கூறினார் சசிகலா. மேலும், ஜெயலலிதா அவர்கள் காட்டிய வழியில் அனைவரும் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

கூட்டத்தில் 131 எம்எல்ஏக்கள் சசிகலாவிற்கு ஆதரவாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும், எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை என்று இதன் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் தாமதம் செய்து தமிழகத்துக்கு ஆளுநர் வருவதை தாமதப்படுத்துவதை குறித்து குடியரசுத் தலைவரிடம் நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அதிமுக பேரவை உறுப்பினர்கள் அனைவரும் இன்று தில்லி சென்று சென்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com