தனிக்கட்சி தொடங்குகிறாரா பன்னீர்செல்வம்...?

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுவார் என பொதுச்செயலாளர் சசிகலா
தனிக்கட்சி தொடங்குகிறாரா பன்னீர்செல்வம்...?

சென்னை: தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுவார் என பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், பன்னீர்செல்வம் மீதான நடவடிக்கை தொடரும் எனத் தெரிகிறது.

சசிகலா குடும்பத்திடம் சிக்கி 100 சதவீதம் மன அழுத்தத்தில் இருந்த பன்னீர்செல்வம், அதிமுகவை மீட்டெடுக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில் பன்னீர்செல்வம் அதிரடி நடவடிக்கையை துவங்கியுள்ளார்

கடந்த 1972-இல் திமுகவின் பொருளாளராக இருந்த எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அதிமுகவை நிறுவிய மக்கள் திலகம் எம்ஜிஆர். தான் இறக்கும் வரை தமிழக முதல்வராக இருந்து வந்தார். அவர் மறைவுக்குப்பின்னர் அதிமுக ஜானகி, ஜெயலலிதா அணி என இரண்டாக பிளவுபட்டது. இதையடுத்து 1989-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அப்போது, ஜானகி தலைமையிலான, அதிமுக அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து பேரவைக்குள் நுழையும் போது எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துடன் ஜெயலலிதா சென்றார்.

அப்போது பேரவையில் ஆளும் திமுக உறுப்பினர்களின் தாக்குதலுக்கு உள்ளாகப்பட்டார் ஜெயலலிதா, இதனை பயன்படுத்தி இரு அணியும் ஒன்று சேர்க்கப்பட்டு அதிமுக பொதுச்செயலராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டு, கடந்த 1991-இல் நடந்த பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பேரவைக்கு சென்றார்.
இதே பாணியில் ஜெயலலிதா உண்மை விசுவாசியான ஓ.பன்னீர்செல்வமும், தற்போது சசிகலா குடும்பத்திடம் சிக்கியுள்ள, அதிமுகவை மீட்க, அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளார். இதற்காக சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணி அளவில் திடீரென சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், கண்களை மூடி தியானம் செய்யத் தொடங்கினார். ஜெயலலிதா நினைவிடத்தில் சுமார் 50 நிமிஷங்கள் தியானம் செய்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சுமார் 9.40 மணி அளவில் தியானத்தைக் கலைத்து விட்டு ஜெயலலிதாவின் நினைவிடத்தைச் சுற்றி வந்து வணங்கி துவங்கியுள்ளார்.

1972-இல் ஏற்பட்ட அதே நிலை தற்போது சுமார் 45 ஆண்டுகளுக்கு பின் அதிமுக பொருளாளர் இருந்த பன்னீர்செல்வம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவரும் தனிக்கட்சி துவங்குவாரா என்ற கேள்வி தற்போதைய தமிழக அரசியில் சூழ்நிலையில் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com