பன்னீர்செல்வம் வீட்டுக்கு விரைந்தார் தீபா..!

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விரைந்துள்ளதாகவும் இருவரும் நீண்ட
பன்னீர்செல்வம் வீட்டுக்கு விரைந்தார் தீபா..!

சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விரைந்துள்ளதாகவும் இருவரும் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணி அளவில் திடீரென வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், கண்களை மூடி தியானம் செய்யத் தொடங்கினார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் சுமார் 50 நிமிஷங்கள் தியானம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறகு செய்தியாளர்கள் சசிகலாவின் மறைமுக திட்டங்களின் சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆன்மா என்னை உந்துதல்படுத்தியது. அதன் விளைவாகத்தான் நான் இங்கு வந்து நிற்கிறேன் என்று போட்டு உடைத்தார்.
அதில் குறிப்பாக என்னை கட்டாயப்படுத்தியதால்தான் ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தில் கையெழுத்திடும் இக்கட்டான சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன்.
யார் முதல்வராக வர வேண்டும்? அம்மாவின் ஆன்மா நாட்டு மக்களுக்கும், கோடானு கோடான தொண்டர்களுக்கும் இதனை தெரியப்படுத்தச் சொன்னதால் இங்கு வந்தேன். கட்சிப் பொறுப்புக்கு அடிமட்ட செயல்வீரர்கள் எண்ணுகிற ஒருவர்தான் பொதுச் செயலாளராக வர வேண்டும். ஒட்டுமொத்த மக்களும் எண்ணுகிற ஒருவர்தான் முதல்வராக வர வேண்டும்.
தமிழகத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஓ.பி.எஸ். இல்லை. யாரோ ஒருவர் இன்றைக்கு கட்சிக்கு ஏற்படுத்தியிருக்கிற நல்ல பெயரை காப்பாற்றும் ஒருவர் வர வேண்டும். இந்த எண்ணத்தில்தான் இப்போது இந்தக் கருத்தை முன்வைக்கிறேன். கடைசியாக உறுதியாக இருப்பேன். தன்னந்தனியாக இருந்து போராடுவேன் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
இதையடுத்து அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து அவரை சசிகலா நீக்கினார். விரைவில் கட்சியிலிருந்து நீக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, இன்று காலை 11 மணியளவில் தன்து இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்பதால் தீபாவுக்கு மதிப்பளிக்கிறேன், வரவேற்கிறேன். அவர் கட்சிப்பணியாற்ற என்னுடன் வந்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும் வீதி வீதியாகச் சென்று மக்களின் ஆதரவை திரட்ட உள்ளதாகவும் பன்னீர்செல்வம் கூறினார்.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு விரைந்துள்ளதாகவும் அங்கு இருவரும் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சந்திப்புக்குப்பிறகு, இருவரும் கூட்டாக பேட்டியளிக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால், தமிழக அரசியல் வட்டாரத்திலும், அதிமுகவினரிடையேயும் பரபரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com