மன அழுத்தத்தின் காரணமாக பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாயம்: முதல்வர் பன்னீர் செல்வம்

மன அழுத்தத்தின் காரணமாக பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மன அழுத்தத்தின் காரணமாக பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாயம்: முதல்வர் பன்னீர் செல்வம்

சென்னை: மன அழுத்தத்தின் காரணமாக பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பத்தியாளர்கள் சந்திப்பில் பன்னீர்செல்வம் கூறுகையில், மன அழுத்தம் என்னிடம் இருந்து கொண்டே இருந்தது. இதனால் தான் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தி பேட்டி அளித்தேன்.
மேலும், கழகத்தில் உள்ள பிரச்னையில் 100ல் 10 சதவீதம்தான் வெளியில் சொல்லியிருக்கின்றேன். மன அழுத்தத்தின் காரணமாக பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்.
சாதரண தொண்டர்களை ஜெயலலிதா உயர்த்தினார். அதனால் என்னை முதல்வராக்கிய பொழுது சிறிதளவுக்கூட பங்கமில்லாமல் அம்மாவின் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதால் சரியாக செய்ய வேண்டும் என பார்த்து பார்த்து செய்து வந்தேன்.
நான் முதல்வராக இருக்கும் போது சில அமைச்சர்கள் கழக பொதுச் செயலாளரே முதல்வராக வேண்டும் என்ற கருத்து தெரிவித்தனர். அது என் மனதை மிகவும் பாதிக்க செய்தது. சக அமைச்சர்களே முதல்வராக இருந்த என்னை அசிங்கப்படுத்தினர். இது போன்ற சூழல் அம்மா இருந்திருந்தால் ஏற்பட்டிருக்காது.
எனக்கு கிடைத்த நல்ல பெயரை கழகத்தின் தலைமை விரும்பவில்லை. இருப்பினும் அமைச்சர்கள் மீது அதிருப்தி காட்டாமல் பணியை மட்டும் செய்தேன்.
முதல்வர் பதவி வேண்டாம் என கூறியபோதும், அந்த பொறுப்பை என்னிடம் கொடுத்து, நான் சாந்தித்த அவமானங்கள் அதிகம். வேதனையுடன் 60 நாட்களை கழித்தேன். அதற்கு பரிகாரம் தேடுவதற்காகவே ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றேன்.
என் விசுவாசத்தை பார்த்து தான், நான் கேட்காமலே எனக்கு ஜெயலலிதா பதவியை கொடுத்தவர். அவர் கொடுத்த பதவியை நான் பங்கம் வராமல் சரியாக செய்து வந்தேன்.
இந்தியா டுடே பத்திரிக்கையாளர் விழாவின் போது எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. குத்துவிளக்கு ஏற்றி பேசிய சசிகலா, நான் பேசுவதற்கு முன் கிளம்பி சென்றுவிட்டார். அப்போது, என் நிலையை நினைத்து வேதனையடைந்தேன்.
சசிகலாவு முதல்வர் ஆவதற்கு என்ன அவசரம் என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு ஆதரவு தெரிவிக்குமாறும், அதற்காக பதவியை ராஜிநாமா செய்ய வற்புறுத்தப்பட்டேன் என முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com