முதல்வர் பேட்டி: தலைவர்கள் கருத்து

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்து:

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்து:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்: தம்மை கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்ததாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் தலையிட வேண்டும். புதிய அரசு அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என இரா.முத்தரசன் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன்: ஆளும் அதிமுக கட்சியில் ஏற்பட்டிருக்கும் இந்த நிலை, தமிழக அரசியலில் ஒரு குழப்பமானச் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்து நடைபெறுவதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா: முதல்வரையே கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் சூழ்நிலையை கவனத்தில் எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும்.
பன்னீர்செல்வம் ஜனநாயகத்திற்கு சிறப்பான சேவைப்பணியாற்றியிருக்கிறார். அதனால் அவரை பாராட்டுகிறேன். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை இனி எடுபடாது.
காவல் துறை இன்னும் பன்னீர்செல்வம் பொறுப்பில் இருந்தாலும் தேவைப்பட்டால் இந்த நிலையில் அசாதாரண சூழ்நிலையில் மத்திய அரசிடம் பாதுகாப்பு கேட்டு பெற வேண்டும். பன்னீர்செல்வத்தின் ராஜிநாமா சட்டப்படி செல்லுமா என்பது வல்லுநர்கள்தான கூற வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் திடீர் அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இனி அதிமுகவால் நிலையான ஆட்சியை தரமுடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. றஅதிமுக பிளவு படக்கூடும். இந்த விவகாரத்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சசிகலா முதல்வராகவும் பொதுச்செயலாளகவும் அறிவிக்கப்பட்டபோது வரவேற்றேன் என்பது உண்மைதான். அது கட்டுக்கோப்பான இயக்கமாக இருக்கிறது என்கிற அடிப்படையில் வாழ்த்து தெரிவித்தேன். ஆனால் இப்போது அதிமுகவால் நிலையான ஆட்சியை தர முடியாது என்பதை உணர முடிகிறது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கட்டாயப்படுத்தித்தான் முதல்வர் பதவியை ராஜிநமா செய்தேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியதை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதை அதிமுக கவனிக்க மறந்து விட்டது. யாருக்கு ஆதரவு அதிகம் என்பதெல்லாம் இப்போது சொல்ல முடியாது.
அதேசமயம் அதிமுகவின் நிலை பன்னீர்செல்வத்தின் பேட்டியின் மூலம் கேள்விக்குறியாகிறது. தமிழக ஆளுநர், அரசியல் சாசன சட்டத்தின்படி ஒரு அரசு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com