ஷேல் கேஸ்: நிபுணர் குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும்: வைகோ

பாறைப் படிம எரிவாயு (ஷேல் கேஸ்) விவகாரத்தில் துறை சார்ந்த நிபுணர் குழுவை அமைத்து, தனது நிலைப்பாட்டை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
ஷேல் கேஸ்: நிபுணர் குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும்: வைகோ

பாறைப் படிம எரிவாயு (ஷேல் கேஸ்) விவகாரத்தில் துறை சார்ந்த நிபுணர் குழுவை அமைத்து, தனது நிலைப்பாட்டை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஷேல் கேஸ் வழக்கு, செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில், தமிழகத்தில் தற்போது ஷேல் கேஸ் எடுக்கும் நடவடிக்கை எதுவும் இல்லை. எனவே, இதுகுறித்துத் துறை சார்ந்த நிபுணர் குழுவை அமைப்பது பற்றி யோசித்துக் கொண்டு இருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளது.
மீத்தேன் எரிவாயு திட்டத்தைத் தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்த முனைந்தபோது, அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா, ஒரு நிபுணர் குழுவை அமைத்து, அதன் பரிந்துரையின் பேரில் மீத்தேன் எரிவாயு திட்டத்தைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தார்.
அதுபோல, ஷேல் கேஸ் குறித்தும் ஒரு துறை சார்ந்த நிபுணர்கள் குழுவை அமைத்து, ஆராய்ந்து மாநில அரசின் நிலைப்பாடு என்ன? என்பதைத் தெளிவுபடுத்துவதுதான் நியாயம் என்றார் வைகோ.
இந்த வழக்கை, அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு பசுமைத் தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com