அதிமுக எம்.எல்.ஏக்கள் தில்லி பயணம் ரத்து

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னையிலிருந்து தில்லி செல்லவிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் பயணம் ரத்து

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னையிலிருந்து தில்லி செல்லவிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக பெண் எம்.எல்.ஏ.க்கள் தில்லி செல்ல சென்னை விமானம் நிலையம் வந்திருந்தனர். எம்.எல்.ஏ.க்களுக்கு திடீர் தொலைபேசி அழைப்பு வந்ததால் பயணம் ரத்து செய்யப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிமுக பேரவை உறுப்பினர்களின் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா ஆளுநரை இன்று வியாழக்கிழமை சந்தித்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகக் கூறி, தம்மை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுப்பார் எனத் தெரிகிறது.
அதேசமயத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்கெனவே ஏற்றுள்ள நிலையில், அவர் தம்மைச் சந்திப்பதற்கு ஆளுநர் அனுமதி தருவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com