அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் நீக்கம்

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக கொள்கை-குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் புதிய செயலராக மதுரை புறநகர் மாவட்டம் பழைய விளாச்சேரி சாலையைச் சேர்ந்த வி.வி.ஆர்.ராஜ் சத்யன் நியமிக்கப்பட்டுள்ளார் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com