எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டில் நடைபெற்ற எருது விடும் விழாவில் ஏராளமான காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. காளைகள் முட்டியதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஆம்பூரை அடுத்த வன்னியநாதபுரம் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் சீறிப்பாய்ந்த காளை.
ஆம்பூரை அடுத்த வன்னியநாதபுரம் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் சீறிப்பாய்ந்த காளை.

வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டில் நடைபெற்ற எருது விடும் விழாவில் ஏராளமான காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. காளைகள் முட்டியதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
நிம்மியம்பட்டில் காளை விடும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் 75-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதனைக் காண ஆலங்காயம், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். மதியம் ஒரு மணியளவில் தொடங்கப்பட்டு மாலை 4 மணி வரையில் காளைகள் விடப்பட்டன.
இதில் 3 சுற்றுகளில் குறிப்பிட்ட தொலைவை வேகமாக ஓடி கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. காளைகள் ஓடியபோது அவற்றை விரட்டுவதற்காக நின்றிருந்தவர்கள் மீது காளைகள் முட்டியதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 4 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வாணியம்பாடி டிஎஸ்பி சுந்தரம், வட்டாட்சியர் முரளிகுமார் ஆகியோர் தலைமையில் போலீஸார், வருவாய்த் துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மிட்டாளம் ஊராட்சியில்...
ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் 150 காளைகள் பங்கேற்றன. மிட்டாளம் ஊராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்கள், ஆம்பூர் பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் எருதுவிடும் திருவிழாவை கண்டு களித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com