சசிகலாவை ஆதரித்தது ஏன்? மதுசூதனன் விளக்கம்

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பான சம்பவங்களுக்கு மத்தியில் அதிமுக அவைத்தலைவராக இருந்து வரும் மதுசூதனனே பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வருகை தந்தது நேரில் ஆதரவு
சசிகலாவை ஆதரித்தது ஏன்? மதுசூதனன் விளக்கம்

சென்னை: சசிகலாவை ஆதரித்தது ஏன் என்பது குறித்து அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் இல்லத்தில் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்.
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பான சம்பவங்களுக்கு மத்தியில் அதிமுக அவைத்தலைவராக இருந்து வரும் மதுசூதனனே பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வருகை தந்தது நேரில் ஆதரவு தெரிவித்திருப்பதால் தமிழக அரசியலில் திடீர் திருப்பமும் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் பன்னீர்செல்வத்தின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் மதுசூதன் பேசுகையில், அதிமுக ரவுடிகளின் கூடாரமாக மாறிவிடக்கூடாது. எம்ஜிஆர் தொடங்கிய இயக்கம் ஒரு குடும்பத்திற்குள் அடங்கிவிடக்கூடாது என்பதற்காகவே யாருடைய வற்புறுத்தலும் இன்றி பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன் என்று கூறியுள்ளார். தவறானவர்களின் கைகளில் அதிமுக இருக்க நான் விரும்பவில்லை. எனவே, சசிகலாவை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதுகிறேன் என்று கூறினார்.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர் பன்னீர்செல்வம். அதிமுகவின் ஒவ்வொரு தொண்டரும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். காப்பற்றப்பட வேண்டிய கட்டத்தில் அதிமுக இருப்பதாக உள்ளது. ஆபத்தான காலங்களிலும் அதிமுகவுக்கு உறுதுணையாக இருந்தவர் பன்னீர்செல்வம். எனவே, தவறானவர்களின் கைகளில் அதிமுக இருக்க நான் விரும்பவில்லை என்று மதுசூதனன் கூறினார்.
மேலும் இதுநாள் வரை சசிகலாவை ஆதரித்தது ஏன்? என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். அதில், கட்சிப் பணத்தை கட்சிக்கு செலவு செய்ய வேண்டும் என்பதால் சசிகலாவை ஆதரித்தேன். சசிகலாவை முதல்வராக ஏற்க மக்கள் மறுக்கிறார்கள் என்று கூறிய மதுசூதனன், ஆர்கே நகர் மக்கள் என்னை பார்த்து ஆவேசத்துடன் கேள்வி கேட்கிறார்கள் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com