சுற்றுலாத் துறை விருது: 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற சுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்படுவோர் வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சுற்றுலா விருது வழங்கும் விழாக் குழுவின் தலைவர் வி.கே.டி.பாலன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற சுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்படுவோர் வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சுற்றுலா விருது வழங்கும் விழாக் குழுவின் தலைவர் வி.கே.டி.பாலன் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் உள்நாட்டு சுற்றுலா வளர்ச்சியிலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையிலும், தமிழகம் முதலிடம் பெற்று வருகிறது. அந்த வகையில் இதை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்திலும், இந்தச் சாதனைக்கு சிறப்பான உழைப்பை வழங்கி வரும் சுற்றுலாத்துறை தொழில் சார்ந்துள்ளோர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்திலும் தமிழ்நாடு சுற்றுலா விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் மதுரா வெல்கம் முதல் சுற்றுலா இதழ், மத்திய, மாநில சுற்றுலா கழகங்களின் ஆதரவுடன் 2-ஆவது ஆண்டாக 2016-ஆம் ஆண்டுக்கான விருது 75 பேருக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருது அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு மிகப் பெரிய அங்கீகாரம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இதன் மூலம் சுற்றுலாத் துறையில் உயர்ந்த சேவையைத் தருகிறவர்களை பொதுமக்கள் அடையாளம் காணவும் முடியும். அதிலும், சுற்றுலாத் துறைக்காக தமிழகத்தில் வழங்கப்படும் ஒரே விருதாகும். சென்னையில் வரும் மார்ச் 24-ஆம் தேதி நடைபெறும் விழாவில் தேர்வு செய்யப்பட்டோருக்கு விருது வழங்கப்பட இருக்கிறது.
மேலும் இந்த விழாவில் வெளிநாட்டு தூதர்கள், சர்வதேச மத்திய மாநில அரசு சுற்றுலாத் துறை சார்ந்தவர்கள், அதிகாரிகள், விமான நிறுவனங்கள், நட்சத்திர ஹோட்டல் நிர்வாகிகள், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், பயண ஏற்பாட்டர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
எனவே, இந்த விருதுக்கு சுற்றுலாத் துறையில் சிறப்பாகச் செயல்படுவோர், நிறுவனங்களைச் சார்ந்தோர் தங்களது முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை www.tamilnadutourismaward.com  என்ற இணைய தள முகவரியில் பிப்.28-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com