ஜல்லிக்கட்டு காளைகளால் தடதடக்கும் வாடிவாசல்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது அதிகாரப்பூர்வ ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டில் தமிழகத்தின்
ஜல்லிக்கட்டு காளைகளால் தடதடக்கும் வாடிவாசல்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது அதிகாரப்பூர்வ ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 850 காளைகளும் 1607 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டு தடை நீங்கியதால் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகாரப்பூர்வமாக பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். பின்னர் போட்டிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார்.

பாலமேட்டில் வாடிவாசல் முன் பார்வையாளர்கள் அமரும் மாடம் மற்றும் இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் முழுவதும் சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இருக்கிறது.

ஒரு மணி நேரத்துக்கு 200 மாடுபிடி வீரர்கள் என சுழற்சி முறையில் களமிறங்கப்பட்டுள்ளனர். போட்டியின் முடிவில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்கள், தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

மாடுபிடி வீரர்களுக்கான முன் பதிவு பாலமேடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் 1670 வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். இவர்களில் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு 1607 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வயது, எடை, உடற்தகுதி குறைபாடு காரணமாக 66 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். பாலமேடு கால்நடை மருத்துவமனையில் காளைகள் பதிவு நடைபெற்றது. இதில் 850 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிக்கான விழா ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேரில் ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com