திருச்சி, திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில்

சென்னையில் இருந்து திருச்சி, திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் இருந்து திருச்சி, திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி
ரயில் எண் 82601: பிப்ரவரி 23 -ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
ரயில் எண் 82602: பிப்ரவரி 26 -ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருச்சி -சென்னை எழும்பூர் சிறப்புக் கட்டண ரயில்
ரயில் எண் 06026: பிப்ரவரி 11,18,25 ஆம் தேதிகளில் திருச்சியில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 06025: பிப்ரவரி 15,22 மார்ச் 1 -ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து காலை 9.30 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு பிற்பகல் 3.10 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை எழும்பூர் -திருநெல்வேலி சிறப்புக் கட்டண ரயில்
ரயில் எண் 06031: பிப்ரவரி 13,20,27 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
ரயில் எண் 06032: பிப்ரவரி 14,21,28 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com