பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக புதுச்சேரி ஓம்சக்தி சேகர் நீக்கம்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த புதுவை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக

புதுச்சேரி: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த புதுவை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி பல அதிரடி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் சிலரும், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதே போல் புதுவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகரும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை அளித்தும் நேரில் சந்தித்தும் ஆதரவை தெரிவித்தார்

இந்நிலையில், ஓம்சக்தி சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன் கூறியுள்ளார்.

முன்னாள் எம்எல்ஏ. ஓம்சக்தி சேகர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. புதுவை மாநில அதிமுகவே பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அளிப்பதாக ஓம்சக்தி சேகர் கூறியுள்ளார். அவருக்கு அதை சொல்ல எந்த உரிமையும் இல்லை.

கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ள ஓம்சக்தி சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எதிரிகளின் தூண்டுதலின் பேரில் அதிமுகவை சீர்குலைக்க பன்னீர்செல்வம் கட்சி கட்டுப்பாட்டை மீறி உள்ளார். எனவே, புதுவை அ.தி.மு.க. அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஓம் சக்தி சேகர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com