சென்னை: அதிமுக அவைத்தலைவராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
அதிமுகவுக்கும் களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவைத்தலைவராக இருந்து வந்த மதுசூதனன் அதிமுகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த பதவிக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.