ஜவுளி வியாபாரி குடும்பத்தோடு தற்கொலை

ஈரோட்டில் மனைவி, மகளோடு ஜவுளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோட்டில் மனைவி, மகளோடு ஜவுளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு உழவன்நகர் காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் ரவிசந்திரன் (53). இவர், ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மாலதி (47), மகள் கீர்த்தனா (19). இவர், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ரவிசந்திரனின் செல்லிடப்பேசிக்கு அவரது உறவினர் வியாழக்கிழமை காலையில் அழைப்பு விடுத்தாராம். ஆனால், அவர் அழைப்பை எடுக்கவில்லை.
இதனால், சந்தேகப்பட்ட உறவினர், ரவிசந்திரனின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது விஷ மாத்திரை சாப்பிட்டு ரவிசந்திரன், மாலதி, கீர்த்தனா ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து, மற்ற உறவினர்களுக்கும், சூரம்பட்டி காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஜவுளித் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருப்பதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, சூரம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com