தர்மம் வெல்லும்- நல்லதே நடக்கும்: ஆளுநரைச் சந்தித்த பின்னர் முதல்வர் ஓபிஎஸ் பேட்டி

தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில் சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசிய முதல்வர் பன்னீர் செல்வம், தமிழகத்தில் தர்மம் வெல்லும், நல்லதே நடக்கும் என்று
ஆளுநர் வித்யாசாகர் ராவை அவரது மாளிகையில் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ஆளுநர் வித்யாசாகர் ராவை அவரது மாளிகையில் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில் சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசிய முதல்வர் பன்னீர் செல்வம், தமிழகத்தில் தர்மம் வெல்லும், நல்லதே நடக்கும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் மகாராஷ்டிர ஆளுநர் வித்யா சாகர் ராவ் வியாழக்கிழமை பிற்பகல் விமானம் மூலம் சென்னை வந்தார். முதல்வர் பன்னீர் செல்வத்தை மாலை 5 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார் ஆளுநர்.
கடந்த இருதினங்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளரான வி.கே.சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பன்னீர் செல்வம், கட்டாயத்தின் பேரில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததாக கூறியிருந்தார். அவரின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்வதாகக் கூறிய ஆளுநர் வித்யாசாகர் ராவ், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு அவரைக் கேட்டுகொண்டார்.
இந்தச் சூழ்நிலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் உடன் சென்றனர்.
சுமார் 30 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பிறகு கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியது:
அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆளுநரைச் சந்தித்துவிட்டு வந்துள்ளோம். தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து ஆளுநரிடம் பேசினோம். நல்லதே நடக்கும். தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தருமமே உறுதியாக வெல்லும் என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
எனினும் சந்திப்பு குறித்த மேல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. சட்டப்பேரவையில் எனது பலத்தை நிரூபிப்பேன் எனக் கூறிவந்த அவர், எத்தனை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தமக்கு இருக்கிறது என்பதையும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக காலையில் அதிமுக அவைத் தலைவர் ஓ.மதுசூதனன் தம்மை சந்தித்து ஆதரவு தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
ஜெயலலிதா காலமானபோது மதுசூதனன்தான் பொதுச்செயலாளர் என்று பேசப்பட்டது. ஆனால், வி.கே.சசிகலாவின் கருத்து திடீரென மாறிவிட்டது. இப்போது நாங்கள் கபட நாடகம் ஆடுவதாகவும், துரோகம் செய்துவிட்டதாகவும் சசிகலா கூறுகிறார்.
எங்கள் மீது சசிகலா அபாண்டமாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தால், மேலும் சில விவரங்களை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். நாங்கள் அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார் பன்னீர் செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com