புதுச்சேரி அதிமுக பிரமுகர் ஓம்சக்தி சேகர் நீக்கம்

புதுச்சேரி மாநில அதிமுக பிரமுகர் ஓம்சக்தி சேகர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர்
புதுச்சேரி அதிமுக பிரமுகர் ஓம்சக்தி சேகர் நீக்கம்

புதுச்சேரி மாநில அதிமுக பிரமுகர் ஓம்சக்தி சேகர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: கட்சியின் கொள்கை -குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் ஓம்சக்தி சேகர் செயல்பட்டுள்ளார். கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று தனது அறிவிப்பில் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
ஆதரவாளர்கள் ராஜிநாமா

இதனிடையே, ஓம்சக்தி சேகர் நீக்கத்தால் அதிருப்தி அடைந்த நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், தாங்கள் வகித்து வந்த கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர்.
கட்சியின் நெல்லித்தோப்பு தொகுதி அவைத் தலைவர் குணா, செயலர் கணேசன், இணைச் செயலர் விக்டோரியா, துணைச் செயலர்கள் வெற்றி அழகன், சூரியகலா, பொருளாளர் ராமலிங்கம், மேலவை பிரதிநிதிகள் மகாலிங்கம், சத்தியவேலு, சகுந்தலா, தொகுதி ஜெயலலிதா பேரவைச் செயலர் பிரபு, எம்ஜிஆர் மன்றச் செயலர் கலையழகன், வார்டு செயலர்கள் சங்கர், வெங்கடேசன், பழனி, கண்ணாடி மூர்த்தி, மதியழகன், தேவேந்திரன், வார்டுகளின் நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்தனர். அவர்கள் ராஜிநாமா கடிதத்தை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினர்.
இதுகுறித்து ராஜிநாமா செய்த நிர்வாகிகள் கூறியது:
இதுவரை ஜெயலலிதாவின் பெயரைக் கூறி ,வாக்காளர்களிடம் வாக்கு கேட்டோம். இனி ஓ.பன்னீர்செல்வத்துக்காக கட்சிப் பணியாற்ற தயாராக உள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com