மணப்பந்தலில் அமரும் மாப்பிள்ளை பன்னீர்செல்வம் தான்: துரைமுருகன் ஆரூடம்

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மணப்பந்தலில் அமரப்போவது மாப்பிள்ளையாக உள்ள
மணப்பந்தலில் அமரும் மாப்பிள்ளை பன்னீர்செல்வம் தான்: துரைமுருகன் ஆரூடம்

வேலூர்: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மணப்பந்தலில் அமரப்போவது மாப்பிள்ளையாக உள்ள மாப்பிள்ளை பன்னீர்செல்வம் தான் என்று எதிர்கட்சி துணைத்தலைவரும் திமுக துணை பொது செயலாளருமான துரைமுருகன் தனது பாணியில் கலகலப்பாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தற்போது, தமிழக அரசியலில் நிலவி வரும் சூழல் குறித்து துரைமுருகன் கூறுகையில்,  "நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனாலே முழிக்குது அம்மா பொண்ணு... நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு..." என்று பாடலாக பாடிவிட்டார்.

மேலும் மணப்பந்தள் தாயராக உள்ளது. மாப்பிள்ளை யாருன்னு தமிழ்நாடே கவனிக்குது. மாப்ளையே மாப்ளையாக இருக்கப் போறாரா? இல்ல பொண்ணு மாப்ளையாகப் போகுதாங்கிறதா என்பது தான் பிரச்சினை.

எங்களுக்கு அழைப்பிதழல் வைத்தால், வழக்கம்போலப் போய் மணப்பந்தளில் நடைபெறும் நிகழ்ச்சியை கண்டுகளிப்போம். அவ்வளவு தான். மாப்பிள்ளை பன்னீர்செல்வம் தான் என்பது எனது கணிப்பு.

நேரு இறந்த போது காங்கிரஸ் இண்டிகேட்டு, சிண்டிகேட்டுன்னு உடைஞ்சுது. கம்யூனிஸ்ட்டும் இரண்டாக உடைந்தது.

எம்.ஜி.ஆர். இறந்த போது ஜானகி அணி, ஜெ அணி, எம்ஜிஆர் கழகம் அது இதுன்னு ஒரு நூறு கட்சிகள் உருவானது. அப்படித்தான் ஜெயலலிதா இறந்தப் பிறகு  நடக்கும்னு கணிச்சேன். அது தற்போது நந்து வருகிறது.

பேரவையில், பன்னீர்செல்வத்தை பார்த்து நான் என்ன சொன்னேன்? உங்களுக்கு எங்களால் பிரச்சினை இல்லை, பின்னாடி ஜாக்கிரதைன்னு சொன்னேன். திரும்பி பார்த்து வி‌ஷயத்தை புரிஞ்சிக்கிட்டவரு நேரா சமாதிக்கே போயிட்டாரு. எனக்குத் தெரிஞ்சி நாட்டையே ஆண்ட மன்னன், சுடுகாட்டுக்குப் போய் உட்கார்ந்தது அரிச்சந்திரனுக்கு அப்புறம், நம்ம பன்னீர்செல்வம் தான். அவரு அழுத்தமான ஆளு. நல்லா யோசிச்சிட்டுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதுக்கு? கேள்வி கேட்டவங்க நாங்க. நம்ம ஆளுநருக்கு வேகம் பத்தாது. நான் ஆளுநரா இருந்திருந்தா, பேரவையை கலைச்சிட்டு, தேர்தலுக்கு அறிவித்திருப்பேன்.

தற்போது, தமிழகத்தில் நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் அவர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com