13 மாவட்டங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: ஆட்சியர்கள் அறிக்கை மீது நீதிமன்றம் அதிருப்தி

கொசு ஒழிப்பு தொடர்பாக, 13 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை அதிருப்தி தெரிவித்தது.

கொசு ஒழிப்பு தொடர்பாக, 13 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை அதிருப்தி தெரிவித்தது.
தமிழகத்தில் கொசுவால் பரவும் நோய்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
எனவே தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், மருத்துவமனைகளில் டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவோருக்கு தனி வார்டுகள் அமைக்கவும் தேவையான மருத்துவ வசதிகளை 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கொசு ஒழிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய, 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் 13 மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கையை சமர்ப்பித்தார். அதை ஆய்வு செய்த நீதிபதிகள், அறிக்கை மீது அதிருப்தி தெரிவித்தனர்.
கொசுவை ஒழிப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை எனில், அதற்கான மாற்று முறைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் கொசுவை ஒழிப்பதற்கு முறையான நடவடிக்கைகளை எடுக்க 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com