அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளிப்பார்கள்: மாஃபா பாண்டியராஜன்

தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பார்கள்
அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளிப்பார்கள்: மாஃபா பாண்டியராஜன்

தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பார்கள் என தமிழக கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த பாண்டியராஜன், இன்று முதல்வர் பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பாண்டியராஜன் கூறியதாவது:

அதிமுக என்னும் எஃகு கோட்டையில் என்றைக்கும் பிளவு ஏற்படாது. பிளவு ஏற்படும் என எதிர்பார்க்கும் திமுகவுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும்.

பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக கட்டுக்கோப்பாக இருக்கும். பிளவு ஏற்படக்கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பம் என்று பாண்டியராஜன் கூறினார்.

இதையடுத்து அமைச்சர் பாண்டியராஜனுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், நாம் நடத்தும் தர்மயுத்தத்திற்கு வலுசேர்க்க வகையில் அமைச்சர் பாண்டியராஜன் வந்து நம்மோடு இணைந்துள்ளார் என்று கூறினார்.

இது இளைஞர்களின், மாணவர்களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது. இன்னும் அங்கிருந்து அனைத்து எம்எல்ஏக்களும் ஒன்றாக இணைந்து நம் பக்கம் வருவார்கள் என்றார். இதற்கு அச்சாரம் சேர்க்கும் வகையில் பாண்டியராஜனின் வருகை உள்ளது.

மேலும், அம்மாவின் ஆன்மா தான் நம்மை இயக்குகிறது. மக்கள் புரட்சியை உருவாக்கியுள்ளது. அந்த புரட்சிக்கு வித்திடும் வகையில் வந்து இணைந்த அனைவரைக்கும் கோடான கோடி நன்றி என்று கூறினார் பன்னீர்செல்வம்.

முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், வாக்காளர்களின் ஒட்டு மொத்த குரலுக்கு மதிப்பளித்து ஜெயலலிதாவின் கொள்கைகள் மற்றும் கட்சியை வலுப்படுத்தும் விதமாக முடிவெடுப்பேன் என்று தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com