எம்எல்ஏக்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: காவல் துறையில் புகார் மனு அளிப்பு

அதிமுக எம்எல்ஏக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன் வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.
எம்எல்ஏக்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: காவல் துறையில் புகார் மனு அளிப்பு

அதிமுக எம்எல்ஏக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன் வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.
இதுதொடர்பாக கூடுதல் ஆணையர் கே.சங்கரை சந்தித்து மனு அளித்த பின்னர், சண்முகநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 8-இல் நடைபெற்ற கூட்டத்துக்குப் பின்னர், எம்எல்ஏக்கள் 3 பேருந்துகளில் ஏற்றப்பட்டு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு வெள்ளை காகிதத்தில் கையெழுத்துகள் வாங்கிய பின்னர், அங்கிருந்து அனைவரையும் வலுக்கட்டாயமாக வேறு இடத்துக்குப் பேருந்தில் கொண்டு செல்ல தயாரானார்கள். அப்போது, அங்கிருந்து நான் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
னால், பிற எம்.எல்.ஏ.க்கள் வலுக்கட்டாயமாக பேருந்துகளில் ஏற்றப்பட்டு, கூவத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது சட்டவிரோதமாகும். அவர்கள், தங்களது குடும்பத்தினருடன் சந்திக்க கூட அனுமதி அளிக்கப்படவில்லை.
செல்லிடப்பேசியும் பறிக்கப்பட்டுள்ளதால், யாருடனும் பேச முடியாமல் உள்ளனர்.
இதனால் எம்.எல்.ஏ.க்களின் உரிமையும், சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளது. அவர்களை காவல் துறை விடுவித்து, சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் ஆணையர் ஜார்ஜ் புகார் மனுவை வாங்க மறுத்துவிட்டார். இதனால் கூடுதல் ஆணையரிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com