கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

கொடைக்கானலில், நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

கொடைக்கானலில், நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
கொடைக்கானலில் மெட்ராஸ் கேனைன் கிளப் மற்றும் கொடைக்கானல் கென்னல் கிளப் இணைந்து, தனியார் பள்ளி வளாகத்தில் நாய்கள் கண்காட்சியை நடத்தின. இக் கண்காட்சியில், ஜப்பான் நாட்டு இனமான அக்கிட்டா, திபெத்தைச் சேர்ந்த ஹஸா அப்úஸா மற்றும் விப்ட், ஆப்கன் ஹவுண்ட், கிரேட்டன், சைபீரியன் என 45 வகையான வெளிநாட்டு நாய்களும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நாய்களும் கலந்துகொண்டன.
இதில், நாய்களின் வயது, அதற்கேற்ற உடல் வலிமை, கீழ்படிதல், ஓடுதல், பராமரிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 10 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டு, சிறந்த நாய்களுக்கு அதன் உரிமையாளர்களிடம் பரிசுகள் வழங்கப்பட்டன. இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com