சசிகலா பேச்சு எதிரொலி.. சென்னை முழுவதும் அதிரடி சோதனை..!

ஓரளவுக்கு தான் பொறுமையை காக்க முடியும் அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்யவேண்டியதை செய்வோம் என்று அதிமுக
சசிகலா பேச்சு எதிரொலி.. சென்னை முழுவதும் அதிரடி சோதனை..!

சென்னை: ஓரளவுக்கு தான் பொறுமையை காக்க முடியும் அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்யவேண்டியதை செய்வோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் பேச்சை தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுபுறங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை நடத்துமாறு காவல்துறைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தமிழகத்தின் நலன் கருதி ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும் என்று கூறி ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, ஜெயலலிதா சொன்னது போல் நமது இயக்கம் ஒரு எஃகு கோட்டை. தொண்டர்கள் இருக்கும் வரை எதற்கும் அஞ்சப் போவதில்லை. நம்மை பிரித்தாள நினைப்பவர்கள் தோற்றுப் போவார்கள். ஒரு அளவுதான் பொறுமை காப்போம் அதற்கு மேல் செய்யவேண்டியதை செய்வோம் என்று ஆவேசம் மிரட்டும் விதமாக பேசினார்.

இந்நிலையில், சசிகலாவுக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனால் மிகப் பெரும் வன்முறையில் ஈடுபட சசிகலாவின் தரப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக ஆயிரக்கணக்கானோர் சென்னையில் குவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை மாநகரம் முழுவதும் அனைத்து இடங்களிலும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அதிரடி சோதனை நடத்த ஆளுநர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து சசிகலாவின் ஆதரவாளராக கருதப்படும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் சோதனை நடத்தி அறிக்கை அளிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் சென்னையில் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை கேட்டு, தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யார் தங்கி இருந்தாலும் கைது செய்யுமாறும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com