தங்கம் பவுனுக்கு ரூ.288 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.288 குறைந்து வெள்ளிக்கிழமை ரூ.22,392-க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.288 குறைந்து வெள்ளிக்கிழமை ரூ.22,392-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள், பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஆகிய காரணங்களால் தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் பங்குச்சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்கம், வெள்ளியின் விலை சற்று சரிவடைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து, ரூ.2,799-ஆக விற்பனையானது.
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.410 குறைந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,365-க்கு விற்பனையானது.
வெள்ளிக்கிழமை
விலை நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் 2,799
ஒரு பவுன் தங்கம் 22,392
ஒரு கிராம் வெள்ளி 45.30
ஒரு கிலோ வெள்ளி 42,365

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com