வெளிப்படையாக வாக்கெடுப்பு: ஆளுநரிடம் ஸ்டாலின் மனு

அரசியல் சாசன வரைமுறையின்படி, சட்டப் பேரவையில் வெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, ஆளுநர் வித்யா சாகர் ராவிடம் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான
வெளிப்படையாக வாக்கெடுப்பு: ஆளுநரிடம் ஸ்டாலின் மனு

அரசியல் சாசன வரைமுறையின்படி, சட்டப் பேரவையில் வெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, ஆளுநர் வித்யா சாகர் ராவிடம் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்புக்கு பின்னர், ஸ்டாலின் அளித்த பேட்டி:-
மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோதும், அவர் மறைவுக்கு பின்னர் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பிறகும் கடந்த 9 மாதங்களாக அரசு நிர்வாகம் முடங்கிப் போய் உள்ளது.
ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் நடைபெற்றபோதும் பாதிக்கப்பட்டது. இப்போது யார் முதல்வர் என்று அதிமுகவினரிடையே நடைபெறும் மல்லுக்கட்டாலும் அரசு நிர்வாகம் முடங்கிப் போய் உள்ளது. எனவே, அரசியல் சாசனத்தின் சட்டரீதியாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிப்படையான வாக்கெடுப்பு: சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை விடுவித்து, சட்டப்பேரவையில் வெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்தி ஜனநாயக மரபு காப்பாற்றப்பட வேண்டும்.
வாக்கெடுப்புக்கு உத்தரவிடாமல் தாமதம் செய்வது குறித்து, ஆளுநரிடம்தான் கேட்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல்: உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. அப்போது, உயர்நீதிமன்றத்தில் தேர்தலை நடத்துவதற்கு அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியது.
ஆகவே, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கும் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முன்னதாக, போரூரில் கொல்லப்பட்ட சிறுமி ஹாசினியின் இல்லத்துக்கு சென்று அவரது பெற்றோருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
அப்போது, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், எம்எல்ஏக்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com