‛உப்பு போட்டு சோறு சாப்பிடுறியா' என பொது மக்கள் கேட்டுகிறார்கள்: கிருஷ்ணகிரி எம்.பி அசோக்குமார்

‛உப்பு போட்டு சோறு சாப்பிடுறியா என பொது மக்கள் கேட்டுகிறார்கள் என்று கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் அசோக்குமார்

சென்னை: ‛உப்பு போட்டு சோறு சாப்பிடுறியா என பொது மக்கள் கேட்டுகிறார்கள் என்று கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து தமிழக அரசியலில் தற்போது அசாதாரண சூழல் நிலவு வரும் நிலையில், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரித்துள்ள கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் அசோக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இரண்டு மாதமாக பணியாற்றி மக்களின் ஒட்டுமொத்த அன்பை பெற்ற பன்னீசெல்வத்திடம் என்ன குறை கண்டீர்கள்? குறுக்கு வழியில் ஆட்சி வர வேண்டும் என கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்தீர்கள் என்று கூறினார்.
மேலும், தொண்டர்கள், மக்களின் கருத்தை கேட்காமல் ராஜிநாமா செய்ய வைத்த உங்களுக்கு மக்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.
கட்சிக்காரனை விலை பேசிய சசிகலா தலைமை எங்களுக்கு தேவையில்லை. தொண்டர்கள் இல்லாத தலைமையாக தற்போது சசிகலா தரப்பினர் உள்ளனர்.
தொகுதிக்குள் சென்றால் மக்கள் எங்களை விரட்டுகிறார்கள்; அடிக்கிறார்கள்; பொது மக்கள் எங்களை திட்டுகிறார்கள். ‛உப்பு போட்டு சோறு சாப்பிடுறியா' என, கேள்வி கேட்கிறார்கள். தொண்டர்கள் நிறைந்த உண்மையான அதிமுகவை யாராலும் அசைக்கவும் முடியாது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com