ஆளுநரின் முடிவு வருங்காலத்தை உறுதிப்படுத்தும்: பொன்.ராதாகிருஷ்ணன்

ஆளுநர் வித்யா சாகர் ராவ் எடுக்கும் முடிவுகள் தமிழகத்தின் வருங்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமையும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆளுநரின் முடிவு வருங்காலத்தை உறுதிப்படுத்தும்: பொன்.ராதாகிருஷ்ணன்

ஆளுநர் வித்யா சாகர் ராவ் எடுக்கும் முடிவுகள் தமிழகத்தின் வருங்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமையும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பாரதிய ஜன சங்க முன்னாள் தலைவர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 100-ஆவது ஆண்டு தொடக்க விழா சென்னையில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, அவரது உருவப் படத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியில் சூழ்நிலைக்கு பின்னால் பாஜக இருக்கிறது எனக் கூறுவதெல்லாம், தங்கள் மீது இருக்கக் கூடிய குறைகளை மறைப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகள்தான்.
அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் எடுக்கும் ஒரு முடிவு 7 கோடி தமிழர்களின் வருங்காலத்தை உறுதிப்படுத்தும் முடிவாக இருக்கும். "எடுத்தேன்- கவிழ்த்தேன்' என்று செய்யக் கூடிய செயல்களை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ஆளுநர்கள் செய்தனர். ஆனால் பிரதமர் மோடி அரசில் ஆளுநர்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும்.
ஆளுநரை நினைத்து பெருமை: ஒரு வாரத்துக்கு முன்பாக தமிழகத்தில் ஏற்பட்ட சூழ்நிலையை கவனத்தில் கொண்டு இப்போது முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் ராஜிநாமா கொடுத்தார். பின்னர் அந்த கட்சியின் தலைவரை தேர்வு செய்தனர். தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னைகளில், இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு ஆளுநர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஆளுநர் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறோம்.
ஆழமாகச் சிந்தித்து, சட்டவல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும். தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் செய்வதைத்தான் பொறுப்பு ஆளுநரும் செய்கிறார். பொறுப்பு ஆளுநராக இல்லாமல், பொறுப்பான ஆளுநராக இருந்து வருகிறார்.
கழகங்கள் இல்லாத தமிழகம் தேவை: தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இது ஓரு கட்சியின் பிரச்னை இல்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்னையில் ஆளுநர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை கவனிக்க வேண்டும். ஆளுநர் தவறு இழைக்கிறார் என பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி கூறுவது, அவரது தனிப்பட்ட கருத்து. பாஜகவின் நிலைப்பாடு என்பது கழகங்கள் இல்லாத தமிழகம் காண வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com