ஆளுநர் மாளிகையில் போலீஸார் குவிப்பு

ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புக்காக போலீஸார் சனிக்கிழமை குவிக்கப்பட்டனர்.
ஆளுநர் மாளிகை முன்பு சனிக்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.
ஆளுநர் மாளிகை முன்பு சனிக்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.

ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புக்காக போலீஸார் சனிக்கிழமை குவிக்கப்பட்டனர்.
அதிமுகவுக்குள் ஏற்பட்ட பிளவின் காரணமாக, சென்னையில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இதில், சசிகலா தரப்பினர் தங்களது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஊர்வலமாக ஆளுநர் மாளிகைக்கு சனிக்கிழமை மாலை வரவுள்ளதாக தகவல்கள் பரவின. இதனால் அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக, கூடுதல் ஆணையர், இரு இணை ஆணையர்கள் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஏற்கெனவே அரசியல் கட்சியினர் ஆளுநரை அடுத்தடுத்து சந்தித்துவருவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேலும் அதிகரிக்கப்பட்டது. இருப்பினும், எம்எல்ஏக்கள் வரவில்லை.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகைப் பகுதியில் அரசியல் நிலைமை சீராகும் வரை போலீஸஸ் பாதுகாப்பு நீடிக்கும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com