சேலத்தில் 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதியில் கடந்த 2001, 2011-ஆம் ஆண்டுகளில் இருமுறை எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் எஸ்.கே.செல்வம். இவர், சேலம் புறநகர் மாவட்டச் செயலராக 2011-ஆம் ஆண்டு தேர்தல் வரையில் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே எஸ்.கே.செல்வம், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலருமான எஸ்.கே.செல்வம் கூறியது:
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த போது, அவருக்கு ஏற்பட்ட சோதனைக் காலங்களில் நம்பிக்கையுடனும் விசுவாசமுடன் இருந்ததால், ஓ.பன்னீர்செல்வம் இரண்டு முறை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
அந்த வகையில், முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அவரால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும். அப்போதுதான் கட்சியின் பெருமையும், புகழும் நீடித்து நிற்கும் என்பதால் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன் என்றார்.
அதேபோல ஆத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மாதேஸ்வரன், ஏற்காடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இளையகண்ணு, சேலம் 1- ஆவது தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரவிச்சந்திரன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானோர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல, சேலம் புறநகர் மற்றும் மாநகர மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சென்னைக்கு சென்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மதுரை முன்னாள் மேயர் ஆதரவு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் நடந்து வருபவர் என்று மதுரை மாநகர முன்னாள் மேயர் எம்.பட்டுராஜன் தெரிவித்தார்.
இப்போதைய சூழலில் நான் யாருக்கு ஆதரவு என்பதைக் காட்டிலும், கட்சியினருக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும் என்பதற்காகவே இதனை தெரிவித்துள்ளேன். இன்னும் ஒரு வாரத்துக்குள் என் முடிவை அறிவிப்பேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com