ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றி: ஒளி ஏந்தி கொண்டாட லாரன்ஸ் அழைப்பு

ஜல்லிக்கட்டுப் போராட்ட வெற்றியை தமிழர்கள் அனைவரும் ஒளி ஏந்தி கொண்டாட வேண்டும் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றி: ஒளி ஏந்தி கொண்டாட லாரன்ஸ் அழைப்பு

ஜல்லிக்கட்டுப் போராட்ட வெற்றியை தமிழர்கள் அனைவரும் ஒளி ஏந்தி கொண்டாட வேண்டும் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடையை நீக்கியதை அடுத்து, அந்த மகிழ்ச்சியை வெற்றி விழாவாக கொண்டாட வேண்டும் என்பது இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஆவலாக உள்ளது.
அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க ஊர் மக்களின் அழைப்பை ஏற்று, மெரீனாவில் கூடிய மாணவர்கள், இளைஞர்கள் 300 பேருடன் செல்வதாக முடிவு செய்தோம்.
பல வருடங்களுக்கு பிறகு நடக்கும் திருவிழா என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாங்களே 40 பேராக குறைத்துக்கொண்டு அலங்காநல்லூர் சென்றோம். அந்த ஊர் மக்களின் அளவுகடந்த அன்பிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
மாணவர்களும், இளைஞர்களும் பெருமளவில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களது வருத்ததை போக்கும் விதமாக, ஜல்லிக்கட்டு வெற்றியை வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி கொண்டாடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நமது போராட்டக் களம் மெரீனா என்றாலும், இன்றைய சூழலில் அந்த இடம் சரியான இடமாக இருக்காது என்பதால் ஏதாவது ஒரு இடத்தில் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாட உள்ளோம்.
இதில் கலந்த கொள்ள முடியாதவர்கள், பிப்ரவரி 18ஆம் தேதி இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ, உங்கள் அலைபேசியில் டார்ச் அடித்தோ அல்லது மெழுகுவர்த்தி ஏந்தியோ வெற்றியை அமைதியாக கொண்டாடலாம்.
மெரீனாவில் பிரகாசித்த வெளிச்சம் மீண்டும் உலகம் முழுவதும் பிரகாசிக்கட்டும்.
இதை நமது கலாசாரத்துக்கு கிடைத்த வெற்றியாக, உலகில் எந்த நாட்டிலிருந்தாலும் ஒளி ஏந்தி கொண்டாடுவதை மறவாதீர் என குறிப்பிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com