திருநல்லூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டி இளைஞர் சாவு ; 89 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள திருநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளை முட்டி இளைஞர் இறந்தார். 89 பேர் காயமடைந்தனர்.
திருநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில்  துள்ளிக்குதித்து வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள்.
திருநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் துள்ளிக்குதித்து வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள திருநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளை முட்டி இளைஞர் இறந்தார். 89 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக, வாடிவாசல் முன்பு மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ. லோகநாதன் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதியேற்றுக் கொண்டனர். காலை 10.30-க்கு ஜல்லிக்கட்டு தொடங்கி முதலில் கோயில் காளையும், பின்னர் மற்ற காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. போட்டியைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். அவர்களில் காளைகள் முட்டிக் காயமடைந்த 89 பேர் திருச்சி அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். பார்வையாளரான மாதுராப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கார்த்திக் (20) காளை முட்டி படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பதிவு செய்யப்பட்டிருந்த 916 காளைகளில் 345 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு குறைபாட்டால் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பார்வையாளர்களுக்கு "கேலரி' வசதி செய்து தராததால், போட்டியை வசதியாக காண முடியாமல் பலர் ஏமாற்றத்துடன் சென்றனர். பாதுகாப்புக்கு போதிய போலீஸார் இல்லாததால் அனுமதி பெறாத நூற்றுக்கும் மேற்பட்டோர் வாடிவாசல் வரை நெருங்கி வந்து காளைகளைப் பிடித்ததால் போட்டி அடிக்கடி தடைபட்டது. தமிழக போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சி, விராலிமலையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com